1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அசாமில் குண்டு வெடிப்பு : 17 பேர் படுகாயம்

அசாமில் குண்டு வெடிப்பு
அசாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாதிகள் இரண்டு இடங்களில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

முதல் குண்டானது நேற்று காலை சுமார் 8 மணியளவில் சோனாரி காவல் நிலையம் முன்பு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த அடுத்த 10 நிமிடத்தில் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
About Writer
Webdunia