அமெரிக்காவில் உள்ள லூஸியானா மாகாண பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஆந்திராவைச் சேர்ந்த 2 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக 3 ஆப்பிரிக்க- அமெரிக்க இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது.சந்திரசேகர ரெட்டி கொம்மா, கிரண்குமார் அல்லம் ஆகியோர் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். பரபரப்பான இந்த கொலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க எஃப்.பி.ஐ. உள்ளிட்ட சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொலைகளை செய்ததாக கருதப்படும் இரண்டு...