1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

புயலுக்கு ஒரே ஊரில் 10,000 பேர் பலி-மியான்மார்!

புய‌ல் மியான்மார் பாங்காக்  நர்கீஸ்
மியான்மாரை கடந்த வாரம் தாக்கிய நர்கீஸ் புயலுக்கு ஒரே ஊரில் 10,000 பேர் பலியாகியுள்ளதாக அரசு தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனால் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்று அந்த செய்தி அச்சம் வெளியிட்டுள்ளது.

மியான்மாரின் போகலே என்ற ஊரில் மட்டும் 10,000 பேர் பலியாகியிருப்பதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த இயற்கைப் பேரழிவு நிவாரணத்திற்காக மியான்மர் அரசு உலக நாடுகளின் உதவிகளைக் கோரியுள்ளது.