இலங்கைத் தலைநகர் கொழும்புவில் சிறிலங்க சமூக நலப் பணிகள் துறை அமைச்சர் அலுவலகத்தில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிறிலங்க சமூக நலப் பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற பெண் ஒருவரை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் சோதித்தபோது குண்டு வெடிப்பு நடந்ததாகவும், இது தற்கொலைத் தாக்குதல் என்றும் சிறிலங்க காவல்துறை தெரிவித்துள்ளது.தற்கொலைப் படை...