பிரிட்டனிலிருந்து 125 இலங்கையர்கள் நாடுகடத்தல்!
பிரிட்டனில் இருந்து 125 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் உள்துறை அமைச்சம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ''2007 ஆம் ஆண்டு மொத்தம் 245 இலங்கையர்கள் அகதிகளாக அடைக்கலம் கோரியுள்ளனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் 125 இலங்கையர்கள் அகதி என்ற தகுதி நீக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்துள்ள 100 இலங்கையர்களின் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல 150 நைஜீரியர்கள், 125 சீனர்கள் ஆகியோரின் விண்ணப்பங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.