1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் : 18 பேர் பலி!

பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்
பாகிஸ்தானின் வடமேற்கு நகரில் பேருந்து ஒன்றில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 2 காவலர்கள், ஒரு பாதுகாப்பு வீரர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர்!

ஆஃப்கானிஸ்தான் எல்லையான பிரச்சனைக்குரிய வசிரிஸ்தான் பகுதியில் இருந்து வந்த பேருந்தில் பாகிஸ்தானின் வடமேற்கு நகரத்திற்கு வந்திறங்கி ஒரு நபர் அங்கிருந்த வேறொரு சிறிய பேருந்தில் ஓடிச் சென்று ஏறியுள்ளார்.

அந்த நபரில் செயலில் சந்தேகப்பட்ட காவல்துறையினர் பேருந்திற்குள் சென்று அவரிடம் சோதனை செய்துள்ளனர். அந்த நேரத்தில் அவர் தான் வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்யதில் 2 காவலர்கள், ஒரு பாதுகாப்புப் படை வீரர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அப்பகுதி காவல் கண்காணிப்பாளர் காலித் மொஹம்மது தெரிவித்துள்ளார்.

தற்கொலைத் தாக்குதல் நடத்திய தீவிரவாதி, வேறொரு இடத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்துள்ளதாக தெரிகிறது என்று அப்பகுதி காவல் அதிகாரி ஹஜி அபிப்-உர்-ரஹ்மான் கூறியுள்ளார்.
About Writer
Webdunia