கோவை மாவட்டத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்களுக்காக விசைத்தறிகள் துணி நெய்து கொடுக்கின்றன. இங்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இதே அளவு தொழிலாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர்.விசைதறி தொழிலாளர்கள் 50 விழுக்காடு கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நேற்று ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாவட்ட...