ஜெயின் சமூகத்தின் அமைப்பாகிய ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (JITO) ஜிடோ வேர்ல்ட் என்ற வர்த்தகம் தொடர்பான இதழை மும்பையில் வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் நிறுவன இயக்குநரும், தலைவருமான ஹேமந்த் எம்.ஷா கூறுகையில், இந்த இதழ் ஜெயின் சமூகத்தினரின் முன் முயற்சியால் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இது எல்லோருக்கும் பயன்படக்கூடியது. தற்போது பல வர்த்தக இதழ்கள் விற்பனையாகின்றன. இதில் ஒரு சில இதழ்களில் மட்டுமே செய்திகள் தெளிவாகவும், வளர்ச்சியை நோக்கியதாகவும்...