இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியால் மக்களுக்கு தேவையான உணவு, கல்வி, நலவாழ்வுக்கு எவ்வித பயனும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சி மூத்தத் தலைவரும், முனனாள் மனித வள மேம்பாட்டு அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார். திருச்சியில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது, வளர்ச்சி என்பது பொருளாதார ரீதியாகவும், அதே நேரத்தில் ஏழைகளின் சமூக மேம்பாட்டுக்கு...