மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைய தொடங்கிய குறியீட்டு எண்கள் இறுதி வரை எந்த மாற்றமும் இல்லாமல் குறைந்தன. இந்தியாவில் மட்டுமல்லாது, அமெரிக்கா, ஆசிய, ஐரோப்பிய நாடு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்களும் குறைந்தன. நேற்று எல்லா பங்குச் சந்தைகளிலும் அதிகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலையில் பங்குச் சந்தைகளில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைய துவங்கின. சுமார் 11.30 மணி...