1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. வேளாண்மை

பருத்தி விலை உயர்வு!

அவிநாசி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் பருத்தி
அவிநாசி: அவிநாசி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திலபருத்தி விலை அதிகர்த்தது.

இங்கு நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், முந்தைய வாரத்தைவிட 50 மூட்டைகள் கூடுதலாக பருத்தி விற்பனைக்கு வந்தது.

இந்த பருத்தியின் தரம் நன்றாக இருந்ததால் குவிண்டாலுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கூடுதல் விலைக்கு விற்பனையானது.

எல்.ஆர்.ஏ. ரகம் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.2,400 முதல் ரூ.2,750 வரையிலும், ஆர்.சி.ஹெச் ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,600 முதல் ரூ.3,000 வரை விலை இருந்தது.

இந்த வார ஏலத்தில் எம்.சி.யூ.5, டி.சி.ஹெச் ரக பருத்தி விற்பனைக்கு வரவில்லை.

அடுத்து வரும் வாரங்களில் பருத்தி வரத்து அதிகரிக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.