விவசாயத் துறையின் வளர்ச்சி முந்தைய மதிப்பீட்டை விட அதிகரித்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் (2007-08) விவசாயத் துறையின் வளர்ச்சி 2.6 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இதன் வளர்ச்சி மதிப்பிட்டை விட உயர்ந்து 3.5 விழுககாடாக இருப்பது தெரிய வந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டில், விவசாயத் துறையின் பங்கு 17 விழுக்காடாக கணக்கிடப்படுகிறது. புது டெல்லியில் இன்று, ஐந்தாவது பொருளாதார புள்ளி விபரங்களை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது....