1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. வேளாண்மை

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணையி‌ன் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. அந்தமான் நீகோபார் தீவுக்கு ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டில், குறிப்பாக கா‌வி‌ரி நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்தது.

இதனால் மேட்டூர் அணையில் விநாடிக்கு 9,521 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. (சென்ற வாரம் முழுவதும் விநாடிக்கு சுமார் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது) விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.