1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. வேளாண்மை

மேட்டூர் நீர் மட்டம் குறைகிறது

மேட்டூர் நீர் மட்டம் குறைகிறது
மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர் மட்டம் 115.4 அடியாக இருந்தது. இதன் அதிக பட்ச நீர் மட்டம் 120 அடி.

அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,265 கன அடியாகவும், அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 22,000 கன அடியாகவும் உள்ளது.