பொதுவாக மலைப்பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படும் மிளகை தஞ்சை சமவெளிப் பகுதியில் தென்னைக்கு ஊடு பயிராக சாகுபடி செய்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்!மிளகு வாசனை பொருட்களில் ஒன்று. இது குறைந்த அளவு தண்ணீரில் மலைப்பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோயில், கம்பம், தேனி, குமுளி ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. அதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது.இதுவரை மலைப் பிரதேசங்களில் மட்டுமே சாகுபடி செய்துவந்த...