புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

அரக்கனை போரில் வென்ற மகிஹாசுரமர்த்தினி

மகிஷா என்ற அரக்கன் பிரம்மனிடம் சாகா வரம் வேண்டி, தான் ஒரு பெண்ணின் கையால் மட்டுமே இறக்க வேண்டும் என  வரம் பெற்றான். பெண்கள் பூவை விட மென்மையாவர்கள் என்றெண்ணி அவன் மூவுலகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

 
எல்லா கதைகளிலும் வருவது போல தேவர்கல் அஞ்சி விஷ்ணு பகவானை நாடி சென்றார்களாம். ஆனால் ஆணாதலால்  அவரால் கூட மகிஷாவை வீழ்த்த முடியவில்லை. விஷ்ணு சிவபெருமானை நாடி நடந்ததை கூற சிவன் தன் ஞானத்தால்  சந்தியா தேவி என்ற சக்தியை உண்டாக்கினார்.
 
நேரிடையாக போருக்கு அழைத்தால் வரமாட்டான் என்றறிந்த தேவி தன் அழகால் அவனை மயக்கினாள். எதிர்பார்த்தது போல்  அவனும் தேவியை திருமணம் செய்து கொள்ள விரும்பி தூது அனுப்பினான். என்னிடம் போரிட்டு வெல்பவர் மட்டுமே தன்னை  திருமணம் செய்ய முடியும் என சொல்லி அனுப்பினார் சந்தியா.
 
தன் வீரர்கள் ஒவ்வொருவராய் அனுப்ப எல்லோரும் தேவியிடம் வீழ்ந்து மடிய, மகிஷனே நேராக களத்திற்கு சென்றான் அவனது வரத்தை அழித்து தேவர்களை மகிழ்வித்தாள் மகிஷாசுரமர்த்தினி. பத்து நாட்கள் நடந்த போரில் அரக்கனை வென்று அழித்ததால் விஜயதசமி உருவானதாய் ஐதீகம்.