1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

நவராத்திரி காலங்களில் நிகழ்த்தப்படும் கர்பா நடனங்கள்

நவராத்திரி பண்டிகை உலகின் வண்ணமிகு பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க விழாவாகும். இது விஜயதசமி, தசரா, ராம்லீலா, துர்கா மா என இன்னும் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. தசரா அல்லது நவராத்திரி பண்டிக்கைக்கு பல்வேறு விதமான  புனைவு மற்றும் இதிகாச கதைகள் உள்ளன.

 
வட இந்தியாவின் பெரும்பாலான மாநில கோவில்களில் துர்க்கைக்கு பத்து நாட்களுக்கும் சிறப்பான பூஜைகள் நடைபெறும்.
 
குஜராத்தில்தான் இந்தியாவிலேயே கொண்டாட்டம் அதிகம் இருக்கும் திருவிழாவாக தசரா நடக்கிறது. பாரப்பரிய நடமான கர்பா, தாண்டியாவை பெரிய திடல்களில் குழுவாக இணைந்து கலாச்சார ஆடை அணிந்து ஆடி மகிழ்வார்கள். நவராத்திரி முழுவதும் இந்த நடன கொண்டாட்டங்கள் தொடரும்.
 
இந்த நடன ஆர்பரியத்தில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிகிருந்து பயணிகள் குவிகின்றனர். வண்ண கற்கல் பொதிக்கப்பட்டு சிகப்பு கலந்த ஆடையில் தங்களின் ஒய்யாரத்தை கண்டு மகிழ்கின்றனர் ஊர்வாசிகள்.
 
திடல்கள் மட்டுமல்லாது தெருக்களிலும் வீடுகளிலும் கூட சில வகை கர்பா நடனங்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒன்பது தினங்களும் விரதமிருந்து கோவிலுக்கு சென்று துர்க்கையை உளமாற வணங்க வேண்டும்.
 
குழந்தைகள் கூட விரதமிருந்து மூன்று தேவிகளை போல ஆடையணிந்து மேடைகளில் காட்சியளிப்பதை காண சில  நேரங்களில் தேவியே தரையிரங்கி வந்தானரோ என்பதுபோல் தோன்றும்.