வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (17:21 IST)

யானை நெருஞ்சில் எந்த நோய்களுக்கெல்லாம் சிறந்த மருந்தாக உள்ளது...?

Yanai Nerunjil
சிறுநீரக கற்கள் தற்பொழுது பலரும் அவதிப்படும் ஒரு பிரச்சனையாகும். இதற்கு யானை நெருஞ்சி ஒரு சிறந்த மருந்தாகும்.


யானை நெருஞ்சில் செடியை வேருடன் பிடுங்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீர் கொண்டு நன்றாக அலச வேண்டும். புளித்த கஞ்சி தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இதனை 10 நிமிடம் வரை மூழ்கும்படி வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர், வெறும் வயிற்றில் இதனை குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், சிறுநீரகக் கல் கரைந்து சிறுநீர் வழியாக  வெளியேறி விடும்.

உடல் சூடு அல்லது உஷ்ணம் என்பதும் அனைவருக்கும் வரும் ஒரு பொதுவான உடல் உபாதையாகும். இதற்கும் யானை நெருஞ்சில் சிறந்த தீர்வு கொடுக்கிறது. பெரு நெருஞ்சில் இலைகளை பறித்து சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு மட்டும் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால், பாகு போன்று ஒரு திரவம் தண்ணீரில் இருப்பதைக் காணலாம். அதைத் மட்டும் தனியாக எடுத்து சிறிது கற்கண்டு சேர்த்து குடித்தாலே போதும், உடல்சூடு, தாது இழப்பு போன்றவை எளிதில் குணமடைந்துவிடும். யானை நெருஞ்சி இலையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.  

யானை நெருஞ்சில் நீரிழிவு நோய்க்கும் உகந்த ஒரு அபூர்வமான மூலிகையாகும். சிறுநீர் சரியாக கழிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள் நெருஞ்சில் முள்ளை வெந்நீரில் ஊற வைத்து, பின்பு அதனை வடிகட்டி நீரை மட்டும் குடித்தால் சிறுநீர் பிரச்சனை தீர்ந்து சிறுநீர் பெருக்கும். மலட்டுத்தன்மைக்கும் இது ஒரு சிறந்த தீர்வாக அமைகின்றது. இது பாலியல் ரீதியிலான பிரச்சனைகளையும் தீர்க்கிறது.

உடல் பிணிகளை மட்டுமல்ல, இது நம் பட்டு நூல் உடைகளில் படும் கறைகளையும் நீக்க உதவுகிறது. யானை நெருஞ்சிலைப் பிடுங்கி எடுத்து தண்ணீரில் ஒரு மணி நேரம் நன்றாக ஊறவிட வேண்டும். அந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் போதும், அழுக்கு, கறை எல்லாம் மாயமாகிவிடும்.