1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (08:16 IST)

மாம்பழத்தை யாரெல்லாம் சாப்பிடவே கூடாது தெரியுமா?

Mangoes
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மாம்பழ சீசனும் களைகட்டியுள்ளது. மாம்பழம் சத்துமிக்க பழம்தான் என்றாலும் சில பிரச்சினை உள்ளவர்கள் மாம்பழத்தை தவிர்ப்பது நல்லது. அதுகுறித்து பார்ப்போம்.


  • மாம்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், காப்பர், விட்டமின்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளது.
  • மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரிக்கும். டயட் உணவிற்கு இது ஏற்றதல்ல.
  • வயிறு கோளாறு உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிட்டால் பேதி உள்ளிட்ட பிரச்சினைகள் எழும் வாய்ப்புள்ளது.
  • மாம்பழம் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை தொடவே கூடாது.
  • தொண்டை புண், தொண்டையில் தொற்றும் உள்ளவர்கள் மாம்பழத்தை தவிர்க்க வேண்டும்.
  • வயதானவர்கள் அதிகம் மாம்பழம் சாப்பிட்டால் மூட்டுவலி, கீழ்வாத பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • மாம்பழம் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் அதிகமாக சாப்பிட்டால் வாய், உதட்டில் புண், வெடிப்பு ஏற்படலாம்