வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (08:34 IST)

சாப்பிட்டதும் வெற்றிலை போடுவது ஏன் தெரியுமா?

Beetal leaves
நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே வெற்றிலை, பாக்கு போடுவது பழக்கமாக இருந்து வருகிறது. வெறுமனே மெல்லும் பொருளாக மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களை கொண்டது வெற்றிலை.



வெற்றிலையில் அயோடின். பொட்டாசியம், விட்டமின் ஏ, பி1, பி2 உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. பல நிகழ்ச்சிகளிலும் சாப்பிட்ட பின் வெற்றிலை போடுவதை பார்த்திருப்போம். சாதாரண நாட்களை விட விஷேச நாட்களில் மக்கள் பல வகை உணவுகளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுகின்றனர். அதனால் ஏற்படும் செரிமான பிரச்சினைகளை சரிசெய்வதற்காகதான் வெற்றிலை தாம்பூலம் தொடங்கியது.

உடல் எடை குறைய 2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து மென்று சாப்பிடலாம். வெற்றிலையை சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி பிரச்சினைகள் குணமாகும்.

கடுகு எண்ணெய்யில் வெற்றிலையை லேசாக வதக்கி நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். வெற்றிலையை விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து பற்று போட்டு வர கீழ்வாதம் சரியாகும். வாய்ப்புண், வாய் துர்நாற்றம் குறைய வெற்றிலையில் குறைவாக பாக்கு சேர்த்து மெல்லலாம்.

எப்போதாவது 2 வெற்றிலை இலைகளை மெல்லுவதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது.

வெற்றிலையுடன் பாக்கு கலந்து சாப்பிடுவது நல்லது. ஆனால் வெற்றிலையுடன் சுண்ணாம்பு கலந்து சாப்பிடுவது வாயில் பாதிப்பை ஏற்படுத்தலாம். சிலர் வெற்றிலையுடன் புகையிலை பயன்படுத்துவது உண்டு. புகையிலை பயன்பாடு ஆபதானதும், தவிர்க்க வேண்றியதும் ஆகும்.