1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் என்ன...?

சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.

தினமும் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது. சிகப்பு அரிசியை புட்டு, சத்தம், கஞ்சி, களி போன்றவற்றை செய்து சாப்பிடலாம். 
 
சாதாரண அரிசியில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும். இதனை சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் பிரச்சனை இருக்கும் நபர்கள் சாப்பிட கூடாது. சிவப்பு  அரிசியை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
 
உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு, சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. அதில் உள்ள நார்சத்து காரணமாக, உடலில் இருக்கும் அதிகப்படியான  கொழுப்புகள் குறையும். சிவப்பு அரிசி புற்றுநோய்க்கு எதிராகவும், புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் போராடும்.
 
எலும்புகளை நன்கு வலுப்படுத்தும் தன்மையும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. தலைமுடி வளர்ச்சியில் சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது.