நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படும் பீட்ரூட் !!
ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்புச் சத்து அவசியம். நம்முடைய உடல் இரும்புச் சத்தை கிரகிக்க வைட்டமின் சி தேவை. இந்த இரண்டும் பீட்ரூட்டில் உள்ளது. எனவே, பீட்ரூட் ரத்த சோகை பாதிப்பைத் தடுக்கிறது.
பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தைச் சீர்படுத்துகிறது. ஒரு கப் பீட்ரூட்டில் 3.4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. உணவு செரிமானமாகி வெளியேற உதவுவதுடன் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாவுக்கு நன்மை செய்கிறது. மலச்சிக்கல், செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
வயது அதிகரிக்க அதிகரிக்க மூளை நரம்பு மண்டலத்தின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கும். மூளைக்கான ரத்த ஓட்டம் குறையும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் ரத்தக் குழாய்களை தளர்வுரச் செய்து மூளைக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
சில வகையான புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை பீட்ரூட் தடுக்கிறது. மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடண்டாக இது செயல்பட்டு, புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு பீட்ரூட் சிறந்த உணவு. இதில் கலோரி குறைவு, நீர்ச்சத்து அதிகம். குறைந்த கலோரி கொண்ட காய்கறிகளை அதிக அளவில் எடுப்பதன் மூலம் உடல் எடை குறைப்பு விரைவுபடுத்தப்படும்.
பீட்ரூட்டில் நார்ச்சத்து அதிகம் என்பதால் உணவு செரிமானம் ஆகி உடனடியாக ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. இதனால், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. பீட்ரூட்டில் கால்சியம் உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கு அவசியம்.