1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (15:05 IST)

பச்சையாக மஞ்சளை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன...?

மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும். கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் குறைக்கும்.

மஞ்சளில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி, இருமல் தீரும். தசை மற்றும் எலும்புகளில் ஏற்படும் வலியைக் குறைத்து வளைவுத் தன்மையை அதிகரிக்கும். முதுகுத்தண்டு மற்றும் மூட்டுகளை உறுதிப்படுத்தும்.
 
மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள், ஆன்டி-ஏஜிங் பொருட்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் குர்குமின் என்னும் பொருளும் உள்ளது.
 
ஒரு பச்சை மஞ்சள் கிழங்கில், 2 - 9 சதவீதம் குர்குமின் உள்ளது. மஞ்சளை தனியாக சாப்பிடுவதை விட, மிளகுடன் சேர்த்து பயன்படுத்தினால், அதில் உள்ள குர்குமினை முழுமையாக உடல் உறிஞ்சும். குர்குமின் முழுமையாக உடலில் சேர, மிளகு மற்றும் தேங்காயுடன் சேர்த்து சாப்பிடலாம். தினமும், 30 - 75 கிராம் மஞ்சள் சாப்பிட்டால், 2 - 9 சதவீதம் குர்குமின் கிடைக்கும்.
 
தோல் வியாதி இருந்தால், மஞ்சளுடன் குப்பைமேனி இலை சேர்த்து அரைத்து, பிரச்னை உள்ள இடத்தில் பூசினால், நல்ல பலனை தரும். தும்மல், மூக்கடைப்பிற்கு மஞ்சளை தீயில் சுட்டு, அதன் வாசனையை முகர்ந்தால், சரியாவதோடு, ஒற்றைத் தலைவலி குறையும்.
 
மஞ்சளை தேய்த்து குளிப்பதால் தோல் ஆரோக்கியமாக இருக்கும். பெண்கள் தொடர்ந்து மஞ்சள் சாப்பிடும் போது, மாதவிடாய் பிரச்சனைகள், நீர்க்கட்டி வராது. இப்பிரச்னைகள் இருந்தால், விடாமல் மஞ்சளை சாப்பிட்டால், கோளாறு சரியாகி, சீரற்ற மாதவிடாய் சரியாகும்; ஹார்மோன் செயல்பாடும் சீராக அமையும்.