திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

நமது உடலில் ஏற்படும் பலவித நோய்களுக்கு தீர்வு தரும் காய்கறிகள்..!

காய்கறிகளில் உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. அவற்றிலுள்ள தாவர வேதிப்பொருட்கள், நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதய  நோய்கள் மற்றும் நீரிழிவு போன்றவற்றைத் தடுக்கும் திறன் கொண்டவை ஆகும்.
ஒரே தாவர வேதிப்பொருளைக் காட்டிலும், பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிக் கலவையில் இருந்து கிடைக்கும் பலவகை வேதிப்பொருட்கள் உடலை நன்கு காத்துப் பராமரிக்கின்றன. பொதுவாக நாம் காய்கறிகளை உணவில் சேர்த்து வருகிறோம். இதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து தாராளமாய்  நமக்குக் கிடைக்கிறது.
 
வேர் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வதால் சாதாரண காய்கறிகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை விட அதிகமாக நம்மால் பெறமுடிகிறது. இவை  ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்லாமல் நமது உடலில் ஏற்படும் பலவிதப் பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது.
 
வெங்காயம்: வெங்காயத்தில் ஆன்டி பாக்டீரியஸ் மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சிப் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப்  போராடும். மேலும் இதில் ஜிங் உள்ளதால், ஆண்களின் ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.
 
இஞ்சி: இஞ்சியில் செரிமான நொதிகள் நிறைந்திருப்பதால் அவை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக இருமல், சளி மற்றும்  தொண்டையில் தொற்று உள்ளவர்களுக்கு இஞ்சி நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.
 
கேரட்: கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கண்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும்  இதனை நாள்தோறும் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும்.
 
முள்ளங்கி: முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறப்பான உணவுப் பொருள். மேலும் இதில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கும்.
 
சேனைக்கிழங்கு: சேனைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், அவை நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
 
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருப்பதோடு உருளைக்கிழங்கைவிடக் குறைவாகவே  ஸ்டார்ச்சானது உள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுலின் சுரப்பைச் சீராக வைக்கும்.