1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இத்தனை ஆரோக்கிய நன்மைகளை கொண்டதா மஞ்சள் !!

மஞ்சளில் அல்கானாயிடுஆக்டிவ் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதில் புற்றுநோயை தடுக்கக்கூடிய சக்தி படைத்தது.

மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமாக, மலக்குடல் மற்றும் கருப்பை சம்மந்தம் ஆனா புற்றுநோய்கள் எதுவும் வரவிடாமல் தடுக்கின்றது.
 
மஞ்சளின் மகிமையை உணர்ந்தவர்கள் அதனைத் தவிர்க்க மாட்டார்கள். மஞ்சள், வேணல் கட்டிகள், பருக்கள், தேமல் இருந்தால், கஸ்தூரி மஞ்சள் சந்தனத்தை அரைத்து பற்று போடலாம்.
 
பாதத்தில் ஏற்படும் வெடிப்புகளுக்கு விளக்கெண்ணையுடன் மஞ்சள் சேர்த்து பூசினால விரைவில் சரியாகும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து லேசாக சூடுபடுத்தி அடிபட்ட இடத்தில் தடவினால் வீக்கமும் வலியும் குறையும்.
 
உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை மஞ்சளுக்கு உண்டு. மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மஞ்சளைப் பயன்படுத்தலாம். அதன் தொடர்பில் நடந்த ஆய்வில் 60 பேர் சோதிக்கப்பட்டனர். அதில் மஞ்சளை உட்கொண்டோரின் மன அழுத்தம் வெகுவாகக் குறைந்திருந்ததாகத் தெரியவந்தது.
 
முகப்பருக்கள்,  கொப்பளங்கள், இவைகளை போக்க மஞ்சள் சிறந்தது. பாலில் மஞ்சளை சேர்த்து குடித்து வந்தால் உடல் இரதம் சுத்தமாவதோடு இதய நோயை கட்டுப்படுத்துகிறது. முட்டையும் ,மஞ்சளும் நல்ல சூடு பாலில் சேர்த்து குடித்து வந்தால் நெஞ்சு சளி, இருமல் விரைவில் குணமாகும்.
 
கோரைக்கிழங்கு பூலான் கிழங்கு, கத்தூரி மஞ்சள். இவற்றை அரைத்து, பச்சை பயறு மாவு கலந்து, தினமும் உடலில் பூசி குளித்து வர, சருமத்தில் நிறம் கூடும்.
 
கஸ்தூரி மஞ்சள் கிழங்கை அரைத்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் சம்பந்தமான நோய்கள் நீங்குகிறது. மஞ்சளை கூட அளவோடு பயன்படுத்துவது நல்லது. வாரத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமை மஞ்சள் அரைத்து, பூசி குளிப்பதை, வழக்கமாக கொள்ள வேண்டும்.