1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 30 மே 2022 (10:52 IST)

பப்பாளி பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் உண்டா...!!

Papaya
ஆஸ்துமாவை தடுக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று பீட்டா கரோட்டின் ஆகும். இது பப்பாளி பழத்தில் அதிக அளவில் உள்ளது.


பப்பாளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பீட்டா கரோட்டின் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதாக கேன்சர் எபிடெமியாலஜி அண்ட் ப்ரெவன்ஷன் பயோமார்கர்ஸ் இதழில் வெளியிடப் பட்டுள்ளது.

பப்பாளி பழத்தை மேற்பூச்சாகப் பயன்படுத்தும் போது தீக்காயங்கள் ​​குணமாவதை ஊக்குவிக்கவும் காயம் பட்ட பகுதிகளில் தொற்று ஏற்படமால் தடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பப்பாளியில் உள்ள சைமோ பாபைன் மற்றும் பபைன் என்ற புரோட்டோலிடிக் என்சைம்கள் காயங்களை குணப்படுத்தும் தன்மைக்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பு கின்றனர்.

பப்பாளியின் என்சைம் கொண்ட களிம்புகள் டெகுபிடஸ் புண்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. பப்பாளி கூந்தலுக்கும் மிகவும் நல்லது ஏனெனில் இதில் வைட்டமின் ஏ உள்ளது. தோல் மற்றும் முடி உட்பட அனைத்து உடல் திசுக்களின் வளர்ச்சிக்கும்

பப்பாளிப் பழத்தில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது இது சரும கட்டமைப்புக்கு ஆதாரனமான கொலாஜன் உற்பத்தி தேவை படுகிறது.