1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Aada Thodai helps to remove mucus and keep healthy !!

சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஆடாதோடை !!

Aada Thodai
ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடை என அழைக்கப்படுகிறது. இது சில இடங்களில் சிறு செடியாகவும், மற்றும் ஒரு சில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.


ஆடாதோடையின் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, மஞ்சள் காமாலை போன்றவை குணமாகும்.

ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடி போல செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும்.

இது வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்லும். சிறுநீரை பெருக்கும். கசரோகம் போக்கும். கபத்தை வெளியேற்றும். மூச்சுதிணறலை நீக்கும். ஆஸ்துமாவை குணமாக்கும். கண்வலி போக்கும். வாயு கோளாறுகளை நீக்கும்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தும் சிறந்த மருந்தாக ஆடாதோடை விளங்குகிறது. இது நுரையீரலில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
உடலின் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும் அற்புத மூலிகை கீழாநெல்லி !!