Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறதா மாதுளம் பழம்...!!

Updated: புதன், 3 ஜூலை 2019 (12:35 IST)
 
மாதுளம்பழத் தோலின் பொடியுடன், பால், ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் ஃபேஸ்பேக் போடலாம். ரூம் ஃப்ரெஷ்னராகப் பயன்படுத்தலாம்.
 
உலர் சருமத்தைக் கொண்டுள்ளப் பெண்களுக்கு மாதுளைப் பழம் ஒரு வரமாக் அமைகிறது. மாதுளைப் பழத்தின் விதைகள் ஒரு சிறு  மூலக்கூறு அமைப்பினைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய மூலக்கூறு அமைப்பானது தோலில் ஊடுருவி எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைய  வழிவகை செய்கிறது. 
 
இப்பழம் உலர்ந்த மற்றும் சீரற்ற தோலுக்கு அழகு சேர்க்கிறது. மேலும் சருமத்திலிருந்து ஈரப்பதம் வெளியேறுவதைத் தடுத்து ஈரப்பதத்தைத்  தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.
 
சருமத்தின் ஆரோக்கியத்தைப் பரமரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளில் மிகவும் பயனளிக்கக்கூடிய வைட்டமின் ‘ஈ’ மாதுளைப் பழங்களில் அதிக  அளவில் காணப்படுகிறது.
மாதுளை பழமானது பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ‘சி’, ஃபோலேட், இரும்புச் சத்து மற்றும் நார்ச்சத்துப் போன்றவற்றிற்கு  மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. எனவே இப்பழம் கருவுற்றப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. 
 
கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், உயிரணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மாதுளைப்பழம் பயன்படுகிறது. கர்ப்பகாலத்தின்போது பருகப்படும் மாதுளைச் சாறு தசைப்பிடிப்புகள் மற்றும் தூக்கத்தில் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கப் பயன்படுகிறது.
 
மாதுளம்பழத் தோலைப் பொடித்து, தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்பரு  உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும். மாதுளம்பழத் தோலைச் சாப்பிட்டால், இதய நோய்கள் வராமல் காக்கும். எலும்பை  வலுவாக்கும்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments