புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 9 மே 2022 (10:06 IST)

பொடுகு பிரச்சனையை போக்க உதவும் சில பயனுள்ள குறிப்புகள் !!

முடியின் சுத்தமின்மை, தூசு, ஹார்மோன்கள், அதிக கெமிக்கல் ஷாம்பு போன்ற பல காரணங்களால் பொடுகு பிரச்சனை வரலாம். அவற்றுக்கெல்லாம் நிரந்தர தீர்வுகள் உண்டு.


ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 6 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்துக் கலக்கவும். இதைத் தலைமுடி மற்றும் மண்டையில் நன்கு தேய்க்கவும். 2 நிமிடம் அப்படியே ஊறவிட்டு, வெறும் நீரால் முடியை அலசவும். ஷாம்பு பயன்படுத்த கூடாது. பூஞ்சைகள் தலையில் இருந்தால், அவற்றை நீக்கும்.

கால் கப் ஆப்பிள் சிடர் வினிகர் கால் கப் தண்ணீர் இரண்டையும் ஸ்ப்ரே பாட்டிலில் கலக்கவும். நன்றாக மிக்ஸ் செய்த பின், தலைமுடி மண்டையில் ஸ்ப்ரே செய்யவும். டவலால் முடியை சுற்றி கட்டி 15 நிமிடங்கள் ஊறவிடவும். முடியை நன்கு அலசிவிடுங்கள். இப்படி வாரத்துக்கு இருமுறை செய்யுங்கள்.

மிகவும் ஈஸியான தீர்வு இது. 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி, மண்டை, முடியின் வேர்கால்களில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர் ஷாம்பு போட்டு அலசுங்கள். இப்படி வாரம் 4 முறை செய்து வர பொடுகு நீங்கும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்து மண்டையில் நன்கு மசாஜ் செய்யுங்கள். 5 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள். பிறகு அதை தண்ணீரால் நன்கு அலசிவிடுங்கள். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். இவற்றால் அப்படியே முடி மற்றும் மண்டையில் படும்படி அலசவும். பின்னர் முடியை அப்படியே விட்டு விடலாம். எப்போதும் போல முடியை டவலால் உலர்த்திக் கொள்ளுங்கள். இப்படி பொடுகு நீங்கும் வரை அவ்வப்போது செய்து வந்தால், விரைவில் பொடுகு நீங்கும்.

வீட்டில் உள்ள கல்லுப்பை பொடித்துக் கொள்ளவும். அவற்றை முடியின் வேர்க்கால்கள், மண்டையில் தேய்த்து மசாஜ் செய்யவும் 5 நிமிடங்கள் ஊறவிட்டு, பின் முடியை ஷாம்பு போட்டு அலசினால் போதும் பொடுகு நீங்கும்.