வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: சனி, 7 மே 2022 (18:43 IST)

முடியின் வளர்ச்சியை தூண்டி அடர்த்தியாக வளரசெய்ய உதவும் குறிப்புகள் !!

Hair
கூந்தலின் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் முடி அடர்த்தியாகவும் வலுவாக வளரும் அதனால் ஒவ்வொரு முறையும் தலை குளிப்பது முன் கூந்தலுக்கு எண்ணெய் தடவி விட்டு 10 நிமிடம் ஊறவைத்து குளித்தால் கூந்தல் அழகும் மேம்படும்.


உருளைக் கிழங்கு வேகவைத்த தண்ணீர்: உருளைக் கிழங்கு வேகவைத்த தண்ணீரை கீழே ஊற்றிவிடாமல் அதை ஆறவைத்து தலைமுடி அலசப் பயன்படுத்துங்கள். அதில் உள்ள புரோட்டீனும் ஸ்டார்ச்சும் தலைமுடி வளர்ச்சியைத் தூண்டி அடர்த்தியாக வளரச் செய்யும்.

உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் முடிக்கு பளபளப்பையும் பொலிவையும் தரும். முடி வறட்சியையும் தடுக்கும். இது சிறந்த கண்டிஷ்னராகவும் செயல்படும்.

தலைக்கு வழக்கமாக ஷாம்பு போட்டு குளித்த பின் இந்த உருளைக்கிழங்கு வேகவைத்த நீரில் தலையை அலச வேண்டும். அப்படியேயும் விட்டுவிடலாம் அல்லது அடுத்ததாக வெறும் தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளவும் செய்யலாம்.

ஆயில் மசாஜ்: முடி வளர்ச்சி அதிகரிக்க தலைமுடியின் வேர்க்கால்களைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
அதனால் தேங்காய் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பான நிலையில் தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளியுங்கள்.

மாதம் 2 முறை இதை செய்து வர முடி வளர்ச்சி இருமடங்காக அதிகரிக்கும். வெதுவெதுப்பான எண்ணெயைத் தலையில் தேய்ப்பதால் முடியின் வேர்க்கால்கள் பலம் பெறும்.

ஊட்டச்சத்துக்களை முடிக்குக் கொடுத்து முடியின் வளர்ச்சியைத் தூண்ட ஆயில் மசாஜ் உதவுகிறது. ஏனெனில் ஆயில் மசாஜ் செய்யும்போது தலைமுடியின் சருமத் துளைகள் திறந்து கொள்ளும். அதில் எண்ணெய் இறங்குவதால் தலைமுடிக்குப் போதிய நீர்ச்சத்தும் ஊட்டச்சத்தும் கிடைக்கிறது.

முட்டை : முட்டையின் மஞ்சள் கருவும் எலுமிச்சை சாறும் கலந்தும் தலையில் தேய்த்து அரை மணிநேரம் வரை ஊறவிட்டு பின் கெமிக்கல் இல்லாத மென்மையான ஷாம்பு கொண்டு அலசுங்கள். முட்டையின் மஞ்சள் கரு வேர்க்கால்களில் முடி வளர்ச்சியை தூண்டி, அடர்த்தியை அதிகரிக்கச் செய்யும்.

நிறைய பேர் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தலைக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் முட்டையின் மஞ்சள் கருவிலும் புரதச்சத்தும் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தும் நிறைந்திருக்கின்றன.

முட்டையின் மஞ்சள் கரு கொஞ்சம் நாற்றம் அதிகமாக இருக்கும். அதனால் அதனுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் அல்லது வாசனையுள்ள எசன்ஷியல் ஆயில் ஏதேனும் சேர்த்துக் கொள்ளுங்கள்.