வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆரோக்கியம் தரும் சில பயனுள்ள மருத்துவ குறிப்புகள் !!

வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

சுகப்பிரவசமாக: ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான  பிரசவம் ஏற்படும்.
 
உடல் அரிப்பு குணம் பெற: வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.
 
காதில் சீழ்வடிதல் குணமாக: வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.
 
நெஞ்சுவலி குணமாக: அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.
 
சிலந்தி கடிக்கு மருந்து: தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.
 
சீதபேதி குணமாக: புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.
 
வயிற்று நோய் குணமாக: சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்
 
காது வலி குணமாக: வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
 
நுரையீரல் குணமாக: நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.
 
பேதி குணமாக: மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும். வாதநோய் குணமாக: குப்பைமேனி  இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.
 
மலச்சிக்கல் சரியாக: அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.