1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெள்ளரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன தெரியுமா...?

கோடை காலங்களில் வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் வராமல் தடுத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்கிறது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவினை சாப்பிட்டு வந்தாலே எந்த விதமான நோய்களும் வராமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். வெள்ளரிக்காயில் உடலுக்கு  தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், நார்சத்துக்கள் அடங்கியுள்ளன.
 
வெள்ளரிக்காய் உடலில் கொழுப்பு படியாமல் தடுக்க உதவியாக உள்ளது. இது அதீத பசியுணர்வினை கட்டுப்படுதுகிறது. மேலும் நீர் சுரப்பினை அதிகப்படுத்துவதால் உடல் எடையினை குறைக்க முக்கியப் பங்குவகிக்கிறது.
 
வயிற்றுக் புண்களை குறைக்க வெள்ளரிக்காய் பயன்படுகிறது. வயிற்றில் அதிக அமிலச் சுறப்பை சமநிலை படுத்தி வயிற்றுப்புண் உருவாகாமல் தடுக்கிறது.
 
வெள்ளரிக்காயில் அதிக அன்டிஆக்சிடன்ஸ் குணங்கள் நிறைந்துள்ளன. இது இரத்தத்தில் அதிக பிராணவாயுவை எடுத்துச் சென்று உடலில் உள்ள செல்களையும் திசுக்களையும் சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றது.
 
வெள்ளரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள், கணையத்தில் இன்சுலின் சுரப்பதை மேம்படுத்த உதவுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை  கட்டுப்படுத்துகிறது.
 
மூளை செல்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. மூளையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
 
கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க வெள்ளரிக்காய் பயன்படுகிறது. மேலும் கல்லீரலில் உள்ள தொற்றுக்களை வெளியேற்றி, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.