வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (09:24 IST)

உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ள புளிச்சக்கீரை !!

Pulicha Keerai
புளிச்சக்கீரையில் தாது உப்புக்கள், இரும்புச் சத்து, விட்டமின்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளன.


காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது.

மந்தம், இருமல், காய்ச்சல், வீக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கும் புளிச்சகீரை ஒரு மிக சிறந்த தீர்வாகும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

நீர் கோர்த்தல் பிரச்னை உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் ரத்தநாளங்களில் பிரச்னை இருப்பவர்களுக்கு, புளிச்சகீரையை மசியல் செய்து சாப்பிட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.

புளிச்சக்கீரையில் நீர்ச்சத்து மிகுதியாக இருப்பதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். தோல் தொடர்பான ஒவ்வாமை நோய்களுக்கும் சிறந்த நிவாரணமாக புளிச்ச கீரை விளங்குகிறது.

புளிச்சக்கீரையின் கனியில் இருந்து வரும் சாற்றை சர்க்கரை மற்றும் மிளகுடன் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று நோய்கள் குணமாகிறது.