வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (17:50 IST)

பூண்டை பச்சையாக உண்பதால் இத்தனை நன்மைகளா...?

Garlic
செரிமான பிரச்னை தீர்ப்பதற்கு இயற்கை கொடுத்த வர பிரசாதமே இந்த பூண்டு. பூண்டு உடலின் இன்சுலின் சுரத்தலை அதிகரிக்க செய்வதால் இது சர்க்கரை நோயை குணப்படுத்தும் வல்லமை கொண்டதாக உள்ளது.


பூண்டு இதன் வாசனைக்கு காரணம் அதில் பல சல்பர் பொருள்கள் உள்ளன. அதில் முக்கியமாக “அல்லிசினில்” என்ற பொருள் ஒரு ஆன்டி-ஆக்ஸிடண்ட் ஆக செயல்படுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் பூண்டுவை உண்பதே சிறந்தது, வெறும் வயிற்றில் உண்டால் தான் அதன் முழு சத்துகளையும் உடல் ஏற்று கொள்ளும்.

வயிற்றில் புண் உள்ளவர்கள் வெறும் பூண்டை உண்பதை தவிர்க்கவும். பூண்டுடன் தேன் சேர்த்தோ அல்லது, பூண்டை நெருப்பில் சுட்டோ உண்ணலாம்.

வெறும் பூண்டை மட்டும் உண்ணாமல் அதனுடன் சிறுது கல் உப்பு சேர்த்து எடுத்து கொள்ளலாம். தேவைப்பட்டால் வெந்நீர் அருந்தி கொள்ளலாம்.

தினமும் பூண்டை பச்சையாக உண்பதால் இதயம் பலம் பெறுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதயம் பலகீனமானவர்கள், இதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் பூண்டை உண்பது நல்லது.

நிமோனியா, காச நோய், நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற அனைத்து விதமான சுவாச பிரச்சனைகளுக்கும் பூண்டு ஒரு சிறந்த மருந்தாகும். வெறும் பூண்டு சாப்பிட முடியாதவர்கள் பூண்டுடன் தேன் சேர்த்தோ அல்லது சமைத்தோ உண்ணலாம்.