Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா பஞ்சாமிர்தம்...?

Written By Sasikala
Updated: திங்கள், 6 ஏப்ரல் 2020 (18:30 IST)

காய்ச்சல் சூட்டினைக் கூட கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்டது நம் பாரம்பரிய பஞ்சாமிர்தம். இவ்வளவு உறுதியாக பஞ்சாமிர்தத்தை பற்றிக் கூற  காரணம் இன்றும் பழனியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பங்குனி மாதம் விழா எடுத்து பஞ்சாமிர்தம் செய்து ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்கும் பழக்கம்  இருந்து வருகிறது. இது பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம். பங்குனியில் துவங்கி ஆண்டு முழுவதும் இதனை வீட்டில் வைத்து உண்பது வழக்கம்.
 
இவ்வளவு அரிய பண்டமான பஞ்சாமிர்தத்தை பற்றி நாம் அனைவரும் அறிந்தாலும் சுத்தமான பஞ்சாமிர்தம் கிடைப்பதில்தான் இன்று சிக்கல். மலை வாழையில் செய்த பஞ்சாமிர்தம் குறைந்தது ஆறு மாதம் தன்னிலை மாறாமல் இருக்கும். இதற்கு காரணம் மலை வாழையில் தண்ணீர் பதம் அறவே இல்லாததுதான்.
 
தகுந்த பொருட்கள் கிடைக்குமானால் பஞ்சாமிர்தம் வீட்டிலேயே செய்வது எளிது. தமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆயிரம் உணவுப் பண்டங்கள், பானங்கள் இருந்தும்  பஞ்சாமிர்தத்திற்கு மட்டுமே அமிர்தம் என்ற பெயர் வழங்கப்படுகிறது. இதுவே இதை விடச் சிறந்த சுவையும், மருத்துவ குணமும் கொண்ட பொருள் வேறில்லை.

எல்லாம் காட்டு

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments