Daily Horoscope
✕

நமது உடலுக்கு தேவையான கால்சியம் சத்துகள் கொண்ட கேழ்வரகு...!

Updated: புதன், 4 ஜூலை 2018 (18:05 IST)
 
கேழ்வரகை தண்ணீரில் ஊறப்போட்டு முளை கட்டி வைத்தாலே, அதில் வைட்டமின் சி அளவு அதிகமாகிவிடும். ஆக, முளை கட்டிய கேழ்வரகைத் தொடர்ந்து  சாப்பிட்டு வந்தாலே, இரும்புச்சத்து தானாகவே உடலிலிருந்து ரத்தத்துக்கு அதிகமாக இழுக்கப்படும்.
 
அரிசியை ஒப்பிடும் போது கேழ்வரகில், நார்சத்து அதிகமாகவே உள்ளது. எனவே வெகு சீக்கிரத்தில் மிகச் சுலபமாக ஜீரணமாகிவிடும்.
 
கேழ்வரகிலுள்ள 'லெஸிதின்' மற்றும் 'மெத்தியோனின்' அமினோ அமிலங்கள், நமது உடலிலுள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க மிகவும் உதவியாய் இருக்கின்றது.  கேழ்வரகிலுள்ள 'திரியோனின்' என்கிற அமினோ அமிலமும், கல்லீரலில் கொழுப்பு உருவாவதைத் தடுக்கிறது. ஆக மொத்தத்தில் உடலிலும், இரத்தத்திலும் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க, கேழ்வரகில் செய்த உணவுப்பொருட்கள் மிகவும் உதவியாய் இருக்கின்றன.
 
தாய்ப்பால் நன்றாக அதிகமாக சுரக்க, கேழ்வரகு மிகவும் உபயோகமாக இருக்கும். மேலும் கேழ்வரகிலுள்ள முக்கிய அமிலங்கள், இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவை தாய்க்கும், தாய்ப்பால் வழியாக குழந்தைக்கும் கிடைக்கிறது.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments