உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் ஓட்ஸ் !!
ஓட்ஸ் என்பது உடல் நலத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த முழு தானிய உணவாக விளங்குகிறது. நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தவும் உடல் எடையை குறைக்கவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவு ஓட்ஸ் ஆகும்.
ஓட்சில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், விட்டமின் பி6, பி1, பி2, இரும்பு, புரதம், நார் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.
ஓட்ஸ்ல் அதிக அளவு நார்சத்து நிரம்பியுள்ளது. இந்த நார்சத்து உணவை சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
கெட்ட கொழுப்பு கரைக்கப்படுவதால் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்பட்டு மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
மலச்சிக்கல் உண்டாவது தடுக்கப்படுகிறது, மேலும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
தினந்தோறும் காலை உணவாக ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். ஓட்ஸ் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்கிறது.
ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உணவுகளை உடல் மெதுவாக செரிக்க செய்யும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென உயராது.