1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (13:13 IST)

பூசணி விதைகளில் உள்ள சத்துக்கள் !!

Pumpkin seed
பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.


ஜிங்க் சத்து பூசணிக்காய் விதைகளில் வளமான அளவில் இருப்பதால், ஆண்கள் பூசணி விதைகளை சாப்பிட்டால் புரோஸ்டேட் ஆரோக்கியம் மேம்படுவதோடு, விந்தணுக்களின் வடிவம், தரம் மற்றும் எண்ணிக்கையை மேம்படுத்தும்.

ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.

இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன.

பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.