Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரக்கோலியில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!!

Written By Sasikala
Updated: செவ்வாய், 21 ஜனவரி 2020 (15:42 IST)
 
பிரக்கோலியில் மற்ற காய்களைக் காட்டிலும் வைட்டமின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்து உள்ளன.  பிரக்கோலியின் நிறம் முழுவதும் ஒரே மாதிரி சமமாக இருக்க வேண்டும். அது பழுப்படைந்து இருக்கக் கூடாது. பிரக்கோலி இதழின் நடுவில் எந்த ஒரு மஞ்சள்  அல்லது பழுத்த பூ போன்ற தோற்றம் இருக்கக்கூடாது. அதன் தண்டு எந்தப் புள்ளிகளும் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு  வேளை அதில் இலைகள் இருந்தால் அவை பளிச் என இருக்க வேண்டும்.
 
ஒரு பிளாஸ்டிக் கவரில் நன்றாக சுற்றி வைக்க வேண்டும். அதன் உள்ளே காற்று செல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இதை  குளிர்சாதனப் பெட்டியில் 5 - 6 நாட்கள் வைக்கலாம். இதனை உபயோகப்படுத்துவதற்கு முன்புதான் கழுவ வேண்டும். அதற்கு முன்பு கழுவி  குளிர் சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.
 
இது ஊட்டச்சத்துகள் நிறைந்த காய். வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கரோடின்  மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்தது. இது நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம்  போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது.
 
பிரக்கோலியை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். இதனை நீங்கள் குழம்பாகவோ, பொரியலாகவோ செய்து உண்ணலாம்.  சூப், சாலட் ஆகியவற்றில் சேர்த்து உண்ணலாம். பிரக்கோலி, ருசியான சுவையும் மொறுமொறுப்புத் தன்மையும் கொண்டது. பிரக்கோலியின்  ஆரோக்கிய நலன்கள் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கும். இது, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். கால்சியம்  மற்றும் வைட்டமின் கே அளவு பிரக்கோலியில் அதிகம் உள்ளது.
 
இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் நோய் வராமல் தடுக்க  உதவும். பிரக்கோலி வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க உதவும். இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே,  வைட்டமின் டியின் வளர்சிதையை சமநிலையில் வைக்க உதவுகிறது.

எல்லாம் காட்டு

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments