வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எல்லா எண்ணெய்களைவிட சிறப்பான மருத்துவகுணம் கொண்ட நல்லெண்ணெய்...!!

எள் விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும் சத்துகள் நிறையவே இருக்கின்றன. தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்களை போக்க எள்ளு விதையை அரைத்து பூசி வர படிப்படியாக குணமாகும்.
எள்ளை செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுத்த பின் எஞ்சிய சக்கையினை பிண்ணாக்கு என்பார்கள். இதில் ஏராளமான சத்துகள்  நிறைந்திருப்பது பலருக்கும் தெரியாது. 
 
கீரைகளுடன் எள் பிண்ணாக்கு சிறிதளவு சேர்த்து உண்பது நல்ல சுவையைத் தரும். இது மனிதர்களுக்கு ஆரோக்கிய பலம் கூட்டும். எள்ளு எல்லா எண்ணெய்களைவிட மிக சிறப்பான மருத்துவகுணம் கொண்டது நல்லெண்ணெய்.
 
எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வரும் சாரை எடுத்து முகம் கழுவினால் முகம் பொலிவோடும், கண்கள் ஒளி  பெறவும், கண் நரம்புகள் பலப்படுத்தி நலமாக்கும். 
 
மாமிச உணவு சாப்பிடாதவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவது நல்ல பலத்தை தரும். எள்ளுருண்டையில் துத்தநாக சத்தும், இரும்பு சத்தும் இருக்கிறது. வயதானவர்கள் எள்ளுருண்டையை சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் எலும்புகள் பலமடையும், ஆரோக்கியத்தை  தரும். இதனால் உடல் சோர்வு குறைந்து சக்தியை தரும் எள்ளை சேர்த்து சூடான சாதத்தோடு உண்டுவர உடல் பலம் அதிகரிக்கும். 
 
எள்ளின் நல்லெண்ணெயை இரு கண்களிலும் விட்டு, தலையில் தடவி சுடுநீரில் மூன்று நாட்கள் தலை முழுகிவர சிவந்த கண், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், கண் கூச்சம், மென்மை குத்தல் ஆகியவை தீரும்.
கார எள், சிகப்பு எள், வெள்ளை எள், காட்டு எள், மயில் எள், பேய் எள், காட்டு மயில் எள், மலை எள், சிற்று எள் என்பதாகும். எள்ளில் இருந்து நெய், எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் எல்லா எண்ணெய்களைவிட மிக சிறப்பான மருத்துவ குணம் கொண்டது. 
 
நல்லெண்ணெய் கபால சூடு, காது வலி, சிரங்கு, புண் போன்றவற்றை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில்  நல்லெண்ணெய் மூலம் பலகாரங்கள் செய்வது இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். 
 
எள்ளின் இலைகள் குடல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. எள் இலையை அரைத்து அதனை உண்பதால் குடல் நோய்களுக்கு தீர்வு காணலாம். இதன் இலைகளை கசாயம் வைத்து குடிக்கின்றனர். எள் இலைகளுடன் வெண்ணெய் வைத்து அரைத்து  உண்பதால் ரத்த மூலநோய் குணமாகும். 
 
சுடுநீரில் சிறிதளவு எள்ளிலை போட்டு குளியல் செய்ய உடல் வலிகளை போக்கும் சக்தி எள் குளியலில் ஆரோக்கியம் காணமுடியும். பொதுவாக எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சிய சத்தும், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, ஈ, இரும்பு சத்தும் உள்ளன. பனை  வெல்லம், கருஞ்சீரகம், எள்ளுடன் சேர்த்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் கால பிரச்சினைகளைத் தீர்க்கும்.