திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

புடலங்காயை எவ்விதம் சாப்பிடுவதால் நோய்கள் நீங்கும்...?

புடலங்காய் ஓர் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வல்லது, மாரடைப்பைத் தடுக்க வல்லது. கருத்தடைக்கு உதவுவது, பால்வினை நோயான எச்.ஐவிக்கு எதிரானது.
புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ், கிளைகோஸைட்ஸ், டேனின்ஸ் ப்ளேவனாய்ட்ஸ், பெனால்ஸ் மற்றும் ஸ்டிரால்ஸ் ஆகிய மருத்துவ  வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன.
 
விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு கறியாக சமைத்து  சாப்பிடுவதால் காய்ச்சல் மறைந்து போகும்.
 
புடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.
 
புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் அந்தி சந்தி என இரண்டு வேளைகள்  சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்பெறும்.
 
இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர். புடலங்காயின் இலைச்சாறு 5 முதல் 10 மி.லி அளவுக்கு உள்ளுக்குப்  புகட்டுவதால் பேதியாகும் வாந்தி எடுக்க வைக்கவும் மருந்தாகும்.