வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 11 டிசம்பர் 2021 (14:39 IST)

ஏராளமான நோய் எதிர்ப்பு சக்தியை தரும் நாயுருவி செடி !!

நாயுருவி உடலில் சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கணையநீர் அதிகம் சுரக்க உதவுகிறது. இந்த மூலிகை தாவரத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்பு அதிக சர்க்கரை அளவை உருவாவதற்கு எதிராகத் திறம்படப் போராடுகிறது.

நாயுருவி இலைகளின் சாற்றை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்களைக் கரைக்க உதவுகிறது. இந்த நாயுருவி மூலிகை சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவும் நல்ல அளவு சிறுநீர்த்தூண்டிகள் உள்ளன.
 
தோல் பிரச்சினைகளுக்குச் சிகிச்சையாக்க இந்த நாயுருவி மரத்தின் வேரைப் பசையாகச் செய்து சருமத்தில் பயன்படுத்தி வந்தால் ஒவ்வாமை தோல் தடிப்புப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
 
நாயுருவியின் சாறு புண்களின் காயங்களைக் குணப்படுத்த உதவுகிறது. இந்த தாவரத்தின் காரணமாக, காயங்களைக் குணப்படுத்த நீங்கள் நேரடியாகத் தோலில் தடவலாம்.
 
இந்த நாயுருவி இரத்தத்தில் கேட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்களைக் குறைக்க உதவுகின்றன, மேலும் இது உடலில் உள்ள நல்ல கொழுப்பைப் பராமரிக்க உதவுகிறது.
 
இந்த மூலிகைச் செடியின் சாற்றை உட்கொள்வது இதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
 
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், நாயுருவி சீராக மாதவிடாய் வெளியேற உதவுகிறது. மேலும், இது நல்ல கருப்பை ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.