Daily Horoscope
✕

தலைப்புண்கள் ஏற்படாமல் பாதுகாக்க உதவும் இயற்கை குறிப்புகள் !!

Written By Sasikala
Updated: திங்கள், 11 ஜனவரி 2021 (18:27 IST)

வேப்ப இலைகள் தோல் மற்றும் சரும ரோகங்களுக்கு சிறந்த நிவாரணி ஆகிறது. இது தோல் வியாதிகளான எஸிமா, சோரியாசிஸ், புழுக்கள்  மற்றும் வார்ட்ஸ்  போன்றவற்றிக்கு நல்ல மருந்தாகும். அதே போல் தலைப்புண்களுக்கும் நல்ல தீர்வாகிறது. இதன் ஆன்டிசெப்டிக் மற்றும்  ஆன்டிபாயடிக் குணங்கள் இருப்பதால்,  தலைபுண்களை விரைவாக ஆற்றிவிடும். 
 
வேப்ப இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அரைத்து விழுதாக்கி, அதை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.  அதே போல் நீருக்கு பதில் நல்ல தேங்காய் எண்ணையையும் பயன்படுத்தலாம். இதை தலையில் தடவி மசாஜ்  செய்து இரவு முழுவதும் அப்படியே ஊறவைத்து,  மறுநாள் காலை ஷாம்பு போட்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
 
மருதாணி இயற்கையாகவே தலைமுடியின் ஈரப்பதத்தை பாதுகாக்கவும், தலைப்புண்கள் ஏற்படாமலும் பாதுகாக்க உதவுகிறது. எந்த தலைமுடி பிரச்சனைக்கும்  மருதாணியை அரைத்து விழுதாக்கி தடவுவது மிகச்சிறந்த இயற்கையான தீர்வாகும்.
 
சோற்று கற்றாழை சோறுடன் எலுமிச்சை சாறு கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி சிறிது நேரம் ஊறிய பிறகு கழுவி விடவும். சோற்று  கற்றாழை  சோற்றுப்பகுதியை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்படியே தடவவும். கொஞ்ச நேரம் ஊறிய பிறகு மிதமான சுடுதண்ணிரில்  கழுவவும்.
 
பேக்கிங் சோடா தலைப்புண்களை குறைக்க உதவுகிறது. தலையில் மயிர்கால்கள் அடைப்பட்டிருக்கும் போது பேக்கிங் சோடா தடவி மசாஜ் செய்து கழுவி விட சிக்கிரம் குணமாகும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments