செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முழங்காலில் உள்ள கருமையை போக்கும் இயற்கை வைத்திய குறிப்புகள் !!

முழங்கை, முழங்கால், கழுத்து போன்ற பகுதிகளில் உள்ள கருமையை நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு எளிய வழியில் எவ்வாறு  வெள்ளையாக்குவது என்பதை பார்ப்போம்.

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி சேர்த்து நன்கு பேஸ்ட் போல் தயாரித்து, முழங்கை மற்றும் முழங்காலில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
 
பொதுவாக தயிருக்கு சரும கருமையைப் போக்கும் திறன் உள்ளது. அதோடு இது நல்ல மாய்ஸ்சுரைசரும் கூட. அத்தகைய தயிரை முழங்கை, முழங்கால் பகுதியில் தடவி குறைந்தது 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ, விரைவில் அப்பகுதியில் உள்ள கருமை நீங்கி வெள்ளையாகும்.
 
மஞ்சளில் உள்ள ஆன்டிசெப்டிக் பண்புகள், பாலில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் மற்றும் தேனில் உள்ள மாய்ஸ்சுரைசிங் பண்புகள், சரும கருமையைப் போக்கும்.  அதற்கு இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள பகுதியில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.
 
சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை ஒன்றாக கலந்து, முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்யவேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு, சருமமும் மென்மையாகும்.