1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (09:12 IST)

இத்தனை அற்புத மருத்துவ பண்புகளை கொண்டுள்ளதா நன்னாரி !!

Nannari Root
நன்னாரி இரு வகைப்படும். வேர்கள் சிறியதாக உள்ள சிறு நன்னாரியின் பூக்கள் மஞ்சள் நிறமானவை. இலைகள் அகலத்தில் குறுகியவை. சமவெளிகள், புதர்காடுகளில் வளர்பவை. மற்றொரு வகை, வேர்கள் பெரியதாக உள்ள பெரு நன்னாரியின் மலர்கள் கருஞ்சிவப்பு நிறமானவை.


நன்னாரி வேர்த்தூள் ஒரு பங்குடன் 25 பங்கு தண்ணீர் மற்றும் சர்க்கரை 50 பங்கு சேர்த்து மணப்பாகு செய்து 15 முதல் 25 மிலி வீதம் தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து நன்கு அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலக்கி குடிக்க வறட்டு இருமல் குணமாகும். நன்னாரி வேர்த்தூள் 2 தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்துக் கலக்கி குடிக்க சிறுநீர் கட்டு குணமாகும்.

சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற் ற்றை சரிசெய்யும்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.

வேர் சூரணம் அரை கிராம் காலை மாலை வெண்ணெய்யில் உட்கொள்ள, ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் உட்கொள்ள பாண்டு, காமாலை தீரும். அதிகமாகச் சாப்பிட்டால் பசி இருக்காது.