Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மருத்துவ குறிப்புகள் !!

Written By Sasikala
Updated: திங்கள், 11 ஜனவரி 2021 (09:51 IST)

நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச் சத்து, ஆண்டி ஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பார்வைக் குறைபாடு, கை, கால் நடுக்கம், சீக்கம், சிறுநீரகப் பிரச்சனையைச் சரிசெய்யும்.
 
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை பயன்படுத்துகிறோம். ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தைப் பலப்படுத்தக் கூடியவை.
 
ஆவாரம் பூ - 150 மி.லி. நீரில், 11 கிராம் அன்று பூத்த ஆவாரம் பூவைப் போட்டு மூடிவைத்து நீர் 100 மி.லி. ஆக சுண்டும் வரை கொதிக்கவைக்க வேண்டும்.
 
ஆவாரம்பூ மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தும் ஆவாரம் பூவைத் தேநீரில் போட்டுக் குடித்துவந்தால், சருமம் பளிச்சிடும்.
 
பாகற்காய் - இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. செல்கள், க்ளுகோஸ் உறிஞ்சுவதை அதிகப்படுத்துகிறது. குடலிலிருந்து சேமிப்பாக இருக்கும் க்ளுகோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.
 
வல்லாரை - வல்லாரையை சமைக்காமல் பச்சையாகத் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும். 

எல்லாம் காட்டு

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

30 வயதுக்கு மேல் சாப்பிட வேண்டிய உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments