வியாழன், 21 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நுரையீரலில் ஏற்படும் சளி பிரச்சினைகளை போக்கும் எளிய மருத்துவ முறைகள் !!

தொடர்ந்து சளி பிரச்சினையால் அவதிப்பட்டு வருபவர்கள் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வரலாம். தினமும்  இரண்டு முறை பருகி வந்தால் சளி இளகி வெளியேறும்.

பிராணயாமா போன்ற ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்வது சளியை வெளியேற்ற உதவும். உடற்பயிற்சியும் கைகொடுக்கும். சுவாசத்தை அதிகரிக்க செய்யும்  உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சளி இளகி வெளியேறும்.
 
மஞ்சளை உணவில் சிறிதளவு சேர்த்து வந்தாலே நுரையீரல் பிரச்சினைகள் உண்டாகாது. அத்துடன் சளியை உண்டாக்கும் கிருமிகளையும் இது கொல்லும். கூடவே  சுவாச குழாயில் உண்டாக கூடிய பாதிப்புகளும் இதனால் தடைப்படும்.
 
நுரையீரல் மற்றும் சளியினால் உண்டாக கூடிய பாதிப்புகளை முழுவதுமாக தடுக்கும் தன்மை தேனிற்கு உள்ளதாம். சளியை முற்றிலுமாக உடலில் இருந்து நீக்கும் தன்மை தேனில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதலால், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேன் சிறப்பான தேர்வாகும்.
 
ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து மிதமான சூட்டில் வாய் கொப்பளித்து வருவதும் நல்லது. நீராவி பிடிப்பதும் சளியை விரட்டும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் மூலிகைகளையோ, ஆவி பிடிக்கும் மாத்திரையையோ போட்டு தலையை துணியால் மூடி  நீராவியை முகத்தில் பிடிக்கலாம்.
 
இஞ்சியில் சளியை ஒழித்து கட்டும் திறன் உள்ளது. அத்துடன் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்கும் தன்மையும் இதில் உள்ளதாம். ஆகவே இஞ்சியை அதிக ழ்வில் சேர்த்து கொள்வது சிறந்தது.
 
நீராவியில் இருந்து வெளிப்படும் சூடான காற்றை சுவாசிக்கும்போது சளி இளகி வெளியேற தொடங்கும்.