திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் மூலிகைகள் !!

கண்டங்கத்திரி - இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல்வலி தீரும். கண்டங்கத்திரி சமூலத்தைக் குடிநீரிட்டுக் குடிக்க உடலின் நீரேற்றம், மூக்கு நீர் பாய்தல், இரைப்பு இவை தீரும்.

கற்றாழை - கற்றாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நீர்ச்சத்து நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பை விரைவாக கரைக்க  உதவுகிறது. உடல் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. அழகு பராமரிப்பு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைப்பதிலும் கற்றாழை ஜெல் உதவுகிறது.
 
கரிசாலை - கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை, ஆகியவற்றின் சூரணம் சமன் கலந்து நாள்தோறும் காலை, மாலை அரை தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இளவயதில் தோன்றும் நரை மாறும். மஞ்சள் கரிசாலையைக் கறியாகச் செய்து உண்ண உடல் பொன்நிறம் பெறும். அறிவு தெளிவு பெறும்.
 
ஊமத்தை - இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம் ஆகியவை தீரும். இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி  இளஞ்சூட்டில் காதில் விட சீதளத்தால் வந்த காதுவலி தீரும். இலையை நீர் விடாது நல்லெண்ணெயில் வதக்கி நாய்க்கடிப் புண்ணில் கட்ட ஆறும்.
 
புதினா - புதினா அதன் இனிப்பு வாசனையால் நிறைய உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இவை நமது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட  கொழுப்புகளை வெளியேற்றுகிறது. எனவே புதினா தேநீர் அருந்தி வந்தால் நல்ல விதத்தில் கொழுப்பை கரைக்க முடியும்.
 
விஷ்ணு க்ரந்தி - விஷ்ணு க்ரந்தி நமது கல்லீரல் செயலை மேம்படுத்துகிறது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அவற்றை சுத்தப்படுத்துகிறது. மேலும் தங்கியுள்ள கொழுப்பை குளுக்கோஸ் மற்றும் சர்க்கரையாக மாற்றி உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது.
 
துளசி - துளசி இலைகள் உடல் கொழுப்பு அதிகரிக்க காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைக்கிறது. அதிகமான கார்டிசோல் அளவு கீழ்வயிற்றில் அதிகமான கொழுப்பு சேரச் செய்கிறது. எனவே இந்த துளசி இலைகளை சாப்பிடும் போது கொழுப்பை எளிதாக குறைக்கலாம்.