Daily Horoscope
✕

தலைமுடி பராமரிப்பில் எலுமிச்சை தரும் அழகு குறிப்புகள்...!

Written By Sasikala
Updated: சனி, 28 செப்டம்பர் 2019 (18:28 IST)
 
பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்ய, எலுமிச்சை சாற்றினை தேன் மற்றும் பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் 1 மணிநேரம் ஊறவைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள்.
 
ஒரு பௌலில் சிறிது தயிரை எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு கொண்டு அலசுங்கள். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன்  கிடைக்கும்.
 
எலுமிச்சை சாற்றினை வேப்பிலையுடன் சேர்த்து கலந்து பயன்படுத்தினால், பொடுகு நீங்குவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்பட்ட பூஞ்சை  தொற்றுக்களும் அகலும்.
 
ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, தலைமுடி மற்றும்  ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு  ஒருமுறை செய்து வர, தலைமுடி பொலிவோடு இருப்பதுடன், தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments