Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுண்டக்காய் வற்றல் குழம்பு செய்ய...!!

Written By Sasikala
Updated: சனி, 28 செப்டம்பர் 2019 (16:10 IST)
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 5
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 15
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
புளியை கரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்  வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ளவேண்டும். பின்னர் அதே வாணலியில் வரமிளகாய், மிளகு, அரிசி, தனியா, துவரம்  பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக தனித்தனியாக சேர்த்து வறுத்து இறக்கி, ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பொடிசெய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
செய்முறை:
 
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் என்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து,  பின் வெங்காயத்தை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
 
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விடவேண்டும்  அடுத்து அதில் புளிச்சாறு சேர்த்து கிளறவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து அத்துடன்  மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக  கொதிக்கவிடவும். கடைசியாக அதன் மேல் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும். சுவையான வற்றல் குழம்பு தயார்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments